Posts

Image
கறிக்குதவும் கறிவேப்பிலையின் குணநலன்கள்.  நம் தமிழ் பாரம்பரிய சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றான கறிவேப்பிலையின் பயன்கள், அதன் நன்மை தீமைகள் தொடர்பாக அறிந்து கொள்வோம்.  திணை – தாவரம்  பிரிவு – வித்து தாவரம்  தாயகம் - இலங்கை, இந்தியா வகுப்பு - இருவித்திலை தாவரம் னுiஉழவலடநனழயெந சுவை – துவர்ப்பு ஆயள் சுமார் 50 ஆண்டுகள்  தமிழ் பெயர் - கறிவேப்பிலை மற்றும் கருவேப்பிலை வேறு பெயர்கள் - கறிவேம்பு, கருவேம்பு, கஞ்சக நனு முறி, கருவப்பிலை சிங்கள பெயர் - கரபிஞ்சா தாவரத்தின் பயன்கள் - உணவிற்கு வாசைன தரும் பொருளாகவும், நோய் நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இம்மரத்தின் நன்றாக பருத்த அடித்தண்டுகள் தளபாட வேலைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.  மருந்தாக பயன்படுத்தப்படும் பாகங்கள் - பூ, காய், இலை, ஈர்க்கு, பட்டை, வேர் எனும் அனைத்தும் மருந்திற்காக பயன்படுத்தப்படுகிறது.  20 கிராம் கறிவேப்பிலையில் உள்ளடங்கியிருப்பவை வைட்டமின் யு உயிர்ச்சத்து 1580 மில்லிகிராமும், வைட்டமின் டீ1 உயிர்ச்சத்து 23 மில்லிகிராமும், டீ2 வைட்டமின்  உயிர்ச்சத்து 59 மில்லிகிராமும், வைட்டமின...
Image
 இறைவன் குடிகொள்ளும் கோயில். இந்துக்களின் பிரதான வழிபாட்டிடம் கோயில் என அழைக்கப்படுகிறது. இறைவனின் தங்குமிடமாக கோயில் கருதப்படுகிறது. இறைவனுக்காக பூஜைகள் செய்து யாக ஹோமங்களை நடாத்தும் புனித தளமாக கோயில்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன.   இறைவன் தடத்தலக்கண வடிவில் அருள்பாளிக்கும் இடத்தை திருக்கோயில் என்றும் விசேடித்து அழைப்பது வழக்கமாகும். இந்து கோயில்களின் மதிற்சுவர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் அலங்கரிக்கப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இதற்கான பொருளை நீங்கள் அறிவீர்களா? இங்கு பயன்படுத்தப்படுகின்ற வெண்ணிறத்தின் மூலம் உடலின் நோயெதிர்ப்பிற்கு பெரும் பங்களிக்கும் வெண்குருதியும் சிவப்பு நிறத்தின் மூலம்  உடலெங்கும் ஒட்சிசனை கொண்டு செல்லும் செங்குருதியும் அடையாளப்படுத்தப்படுகின்றன. மேலும் வெண்ணிறத்தின் மூலம் ஆணின் விந்தணுக்களும் சிவப்பு நிறத்தின் மூலம் பெண்ணின் கருப்பையும் அடையாளப்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. புதிய உயிரின் உருவாக்கம் தொடர்பில் விஞ்ஞானரீதியான விளக்கத்தை பண்டைய இந்துக்கள் அறிந்திருந்தமையை உலகிற்கு பறைசாற்றும் வகையில் இந்து கோயில்கள் வடிவமைக்கப்பட...

சுந்தரமான மனிதராவதற்கு

Image
  உலகில் வாழும் எல்லா உயிர்களும் சுகமாக வாழ்வதற்கே விரும்புகின்றனர். அழுது புலம்பி கவலையுடனும் வேதனையுடனும் வாழ்வதற்கு யாருமே விரும்பமாட்டார்கள். ஒரு சொல்லால் கூட துன்புறுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள்.  இயற்கையின் எழுதப்படாத விதி நாம் எதை கொடுக்கின்றோமோ, எந்த வார்த்தைகளை பிரயோகிக்கின்றோமோ, எத்தகைய எண்ணங்களை நினைக்கின்றோமோ அதுவே எமக்கு பன்மடங்காக திரும்பக்கிடைக்கும் என்பது இயற்கையின் எழுதப்படாத விதியாகும். கர்மம், வினை, ஊழ் என்றெல்லாம் இயற்கையின் இவ் விதியே அழைக்கப்படுகின்றது. இந்த விடயத்தை அல்லது இந்த இயற்கையின் நீதியை ஏற்று அதன்படி நடந்துகொள்பரது அகவாழ்வில் பென்னம் பெரிய புரட்சியே நிகழும். நீங்கள் எதை பெற விரும்புகின்றீர்களோ அதனை ஏனையோருக்கு கொடுப்பதற்கு முற்படுவீர்கள். நம்ப முடியுமா?  தன்னை உவமையாகக் கொண்டு. எம்மை யாராவது ஏளனம் செய்தால், அவமானப்படுத்தினால், ஏசினால், திட்டினால், அடித்தால், துன்புறுத்தினால் நாம் சந்தோஷப்படுவோமா? இல்லை. யாரேனும் எம்முடன் சிரித்து பேசுவதாக இருந்தால், எம்மை புகழ்ந்து பேசினால், எம்மை பாராட்டினால், எமக்கு பரிசுகள் அளித்தால் நாம் மிகவும் சந்...
Image
                      புத்த பகவான் எனும் நிகரற்ற மாமனிதரை மூல கர்த்தாவக கொண்டு உலகெங்கும் பரவிய உத்தம மதமே புத்த தர்மம் எனப்படுகிறது. அந்த பௌத்த தர்மத்தை பின்பற்றுபவர்கள் தம் ஒரே மாபெரும் தலைவரான அந்த கௌதம புத்த பகவான் இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன் பயன்படுத்திய பொருட்களைக்கூட பெரும் புனித பொருட்களாக கருதி வணங்குவர். இத்தகைய பின்னணியில் புத்த பகவான் மொழிந்தருளிய எண்பத்து நான்காயிரம் தர்ம போதனைகளின் ஸ்பரிசத்தை பெற்ற, திருவாயில் வீற்றிருந்த உத்தம பற்தாதுவை தம் உயிரிலும் மேலாக கருதி வணங்குகின்றர். இவர்கள் அந்த புனித பற்தாதுவின் மீது கொண்டுள்ள மாபெரும் மரியாதையை பற்தாதுவை சுட்டுவதற்காக 'தன்த தாது உத்தமர், தளதா ஹாமுதுருவோ' தளதா உத்தமர் ' போன்ற மாமரியாதைக்குரிய சொற்களை பயன்படுத்தி சுட்டுவதன மூலம் எம்மால் ஓரளவேனும் புரிந்துகொள்ள முடியும். அந்த புனித பற்தாது உத்தமருக்கு மாபெரும் சக்கரவர்த்தி மன்னரை போன்று பாவனை செய்து மாபெரும் பூஜைகள் நிகழ்த்துவதன் மூலமும் கலையம்சங்கள் பொருந்திய ஊர்வலங்களில் கொண்டு செல்வதன் மூல...