கறிக்குதவும் கறிவேப்பிலையின் குணநலன்கள். 



நம் தமிழ் பாரம்பரிய சமையலில் தவிர்க்க முடியாத ஒன்றான கறிவேப்பிலையின் பயன்கள், அதன் நன்மை தீமைகள் தொடர்பாக அறிந்து கொள்வோம். 

திணை – தாவரம் 

பிரிவு – வித்து தாவரம் 

தாயகம் - இலங்கை, இந்தியா

வகுப்பு - இருவித்திலை தாவரம் னுiஉழவலடநனழயெந

சுவை – துவர்ப்பு

ஆயள் சுமார் 50 ஆண்டுகள் 

தமிழ் பெயர் - கறிவேப்பிலை மற்றும் கருவேப்பிலை

வேறு பெயர்கள் - கறிவேம்பு, கருவேம்பு, கஞ்சக நனு முறி, கருவப்பிலை

சிங்கள பெயர் - கரபிஞ்சா

தாவரத்தின் பயன்கள் - உணவிற்கு வாசைன தரும் பொருளாகவும், நோய் நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இம்மரத்தின் நன்றாக பருத்த அடித்தண்டுகள் தளபாட வேலைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. 

மருந்தாக பயன்படுத்தப்படும் பாகங்கள் - பூ, காய், இலை, ஈர்க்கு, பட்டை, வேர் எனும் அனைத்தும் மருந்திற்காக பயன்படுத்தப்படுகிறது. 


20 கிராம் கறிவேப்பிலையில் உள்ளடங்கியிருப்பவை


வைட்டமின் யு உயிர்ச்சத்து 1580 மில்லிகிராமும்,

வைட்டமின் டீ1 உயிர்ச்சத்து 23 மில்லிகிராமும்,

டீ2 வைட்டமின்  உயிர்ச்சத்து 59 மில்லிகிராமும்,

வைட்டமின் ஊ உயிர்ச்சத்து 1 மில்லிகிராமும்,

சுண்ணாம்புச் சத்து 230 மில்லிகிராமும்,

இரும்புச் சத்து 0.9 மில்லிகிராமும் இருக்கிறது.

இதன் காலரி என்னும் உஷ்ண அளவு 28.

உணவின் வாசனைக்காக பயன்படுத்தும் இந்த கறிவேப்பிலையில் பல மருத்துவ குணங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. எனவேதான் இதனை எமது முன்னோர்கள் தொன்றுதொட்டு தம் பலவித நோய்களை தீர்த்து வைப்பதற்காக பயன்படுத்தியிருக்கின்றனர். 

நோய் தீர்க்கும் கறிவேம்பு

இரத்த சோகை

நாள்பட்ட இரத்த சோகை கொண்டவர்கள், உலர்ந்த கறிவேப்பிலையை பொடி செய்து சுடுநீர் அல்லது பாலுடன் சேர்த்து கலந்து பருகி வர, விரைவில் சரியாகும்.

கண்புரை

வயதான காலத்தில் கறிவேப்பிலையை சாறு எடுத்து, அந்த சாற்றினைப் பருகி வந்தால், அது பார்வை கோளாறுகளைத் தடுப்பதோடு, முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தையும் தடுக்கும்.

வயிற்றுப்போக்கு

15-20 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால், வயிற்றுப்போக்கு உடனடியாக நின்றுவிடும்.

உடல் பருமன்

உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொண்டு வர வேண்டும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் பருமன் குறைவதோடு, நீரிழிவும் தடுக்கப்படும். முக்கியமாக இம்முறையை 3 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வயிற்றுக்கடுப்பு

வயிற்றுப்போக்குடன் இரத்தம் மற்றும் சளி வெளியேறும் நிலையைத் தான் வயிற்றுக்கடுப்பு என்று சொல்வார்கள். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண, தினமும் 8-10 கறிவேப்பிலை இலைகளை பச்சையாக உட்கொள்ள வேண்டும்.

காலைச் சோர்வு

கர்ப்பிணிகளுக்குத் தான் காலைச் சோர்வு ஏற்படும். இதனைத் தவிர்க்க 10 கறிவேப்பிலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து பருக வேண்டும்.

குமட்டல் மற்றும் வாந்தி

மோருடன் கறிவேப்பிலையை அரைத்து கலந்து குடித்து வர, குமட்டல் மற்றும் வாந்தியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

செரிமான கோளாறு

செரிமான கோளாறுகளால் அவஸ்தைப்படுபவர்கள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினா போன்றவற்றை அரைத்து சாறு எடுத்து பருக உடனே செரிமான பிரச்சனைகள் குணமாகும்.

பசியின்மை மற்றும் சுவையின்மை

உங்களுக்கு சரியாக பசி எடுப்பதில்லையா? சுவை எதுவும் தெரியவில்லையா? அப்படியெனில் அதனை சரிசெய்ய, மோரில் கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து சேர்த்து, அத்துடன் சீரகப் பொடி, ப்ளாக் சால்ட் சேர்த்து கலந்து பருக வேண்டும்.

சிறுநீரக பிரச்சனைகள்

கறிவேப்பிலை ஜூஸ் உடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து பருகி வந்தால், சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.

பூச்சிக்கடி

பூச்சிக்கடியைக் குணப்படுத்த கறிவேப்பிலை மரத்தில் உள்ள பழங்களை அரைத்து அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ விரைவில் சரியாகும்.

கறிவேப்பிலை முடி வளர தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொண்டுள்ளது. கறிவேப் பிலையை தவறாமல் உட்கொள்வது முடியை பலப்படுத்துகிறது, பொடுகை குணப்படுத்துகிறது மற்றும் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது.

முகப்பரு நீங்க

கறிவேப்பிலையை நன்றாக காய வைத்து இடித்துக்கொள்ளவும். இந்த பொடி ஒரு தேக்கரண்டி அளவும் அரை தேக்கரண்டி சோம்பு பொடியும் சேர்த்து சுத்தமான பன்னீர்விட்டு குழைத்து பருக்களின் மேல் பூசிவர பருக்கள் காய்ந்து உதிர்வதுடன் பருக்களால் தோன்றும் தழும்புகளும் மறைந்துவிடுடம். 



அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு

கறிவேப்பிலை பொதுவாக பாதுகாப்பானது என்றாலும் அதிக அளவில் உட்கொள்வது வயிற்றில் அமிலத்தன்மை போன்ற சில பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இது வயிற்றில் எரியும் உணர்வு, வயிற்று வலி மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கறிவேப்பிலை ஒவ்வாமை இருந்தால் அதை தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் கறிவேப்பிலை அதிக அளவு பயன்படுத்துவதற்கு முன், பயிற்சி பெற்ற மருத்துவப் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.

 

Comments

Popular posts from this blog

சுந்தரமான மனிதராவதற்கு