இத்தகைய கலாச்சார, சமய பின்னணியுடன் இருந்த காலத்தில் அனுராதபுரத்தை ஆண்டு வந்த 5ம் மகிந்த எம் அரசனை தோற்கடித்து தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்களாக சோழர்கள் கைப்பற்றினார்கள். அந்த ஆக்கிரமிப்பின் பின்னர் அதுவரை காலம் இலங்கையின் ஒப்பற்ற தலைநகராக விளங்கிய அனுராதபுரத்தை விட்டு பொலநறுவை தலைநகராக கொள்ளப்பட்டது. இக்காலகட்டத்தில் உருகுணையில் பிறந்த கித்தி எனும் அரச பெரும்போருக்கு பின்னர் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நாட்டை கைப்பற்றி இலங்கையை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தார். அந்த மாபெரும் மன்னர் ஜனநாதமங்கலம் என சோழர்களால் அழைக்கப்பட்ட பொலநறுவைக்கு விஜயராஜபுரம் என பெயரிட்டடு இங்கே கண்கவரும் ஓர் விகாரைத்தொகுதியை அமைத்து ஆங்கே புனித தளதா உத்தமரை நிறுவி வழிபட்டுவந்தார்.
இக்காலகட்டத்தில் தென்னிந்தியாவில் பேரரசாக சோழ்ர்கள் விளங்கினார்கள். அந்த சோழர்களிடம் மிகவும் சிறப்பு வாய்ந்ததொரு படை இருந்தது. அவர்கள் 'வேளைக்காரர்கள்' என அழைக்கப்பட்டார்கள். அந்த வேளைக்கார படையினர் வீரத்தில் சிறந்தவர்கள். செயற்திறனும் விசுவாசமுமிக்க அவர்கள் மகா விஜயபாகு மன்னரது உயிரை பாதுகாப்பதற்காகவும் அரசன் தன் உயிரிலும் மேலாக கருதுகின்ற புனித பற்தாதுவை பாதுகாப்பதற்கும் அமர்த்தப்பட்டார்கள். எவரேனும் ஒருவர் புனித பற்தாதுவை கைப்பற்றி கொண்டாராயின் அவரே அரசன் என கூறத்தகுந்த அரசில் பின்னணி இருந்த அக்காலத்தில் சிங்கள மாமன்னர் தம் அரசுக்கு உத்தரவாதமாக விளங்கும் சின்னத்தை தமிழ் படையொன்று வழங்கியமையிலுந்து சிங்கள தமிழர் நாம் எத்தகைய புரிந்துணர்வுடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்திருக்கிறோம் என்பதனை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
மாமன்னர் விஜயபாகு தன் முப்பதாவது வருடத்தில் தென்னிந்தியாவின் சோழர்களுடன் போருக்கு ஆயத்தமானார். அந்த போருக்கு வேளைக்கார்கள் தம் பங்களிப்பை அளிப்பதற்கு விரும்பவில்லை. இதனால் கோபமுற்ற மன்னர் வேளைக்காரர்களை அரச பணியிலிருந்து நீக்கினார். 55 வருட காலம் அரசாட்சி செய்த மகா விஜயபாகு மன்னர் தம் 73 வருடத்தில் இயற்கை எய்தினார். அரசரது மறைவிற்கு பின்னர் அரசாட்சஜயை கைப்பற்றும் நோக்கில் நாட்டில் கலகங்கள் ஏற்பட்டனஇ நாட்டில் தோன்றிய இந்த அமைதியற்ற காலகட்டத்தில் மேலும் புனித பற்தாதுவை பாதுகாப்பதற்கு சங்கையரால் இயலவில்லை. இத்தகைய அராஜகமான அமையற்ற சூழ்நிலையிலேயே உத்தரமூல வெ
ய்யாகரணீ மொக்கல்லா ஸ்தவரிர எனப்படும் அரச குரு புனித பற்தாஐவவை பாதுகாப்பதற்கான மாபெரும் பொறுப்பை வீரமிக்க விவேகமான வேளைக்கார படையினரிடம் ஒப்படைத்தார். (மிகவும் அற்புதமான இந்த சம்பவத்தை வேளைக்காரர்கள் கல்லில் எழுதி வைத்தார்கள்) அரச குடும்பத்தினர், ஆக்கிரமிப்பாளர்கள், எனும் அனைவரும் அரசாட்சியை கைப்பற்றும் நோக்கில் போராடிக்கொண்டிருந்த சமயத்தில், செல்வங்களுக்காக விகாரைகள் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் அரசரது கோபத்திற்காளாகி அரச சேவையிலிரந்து நீக்கப்பட்ட தமிழ் படையினரிடம் பௌத்த குருமார்கள் அரச சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என பொறுப்பை ஒப்படைப்பதானது அதிசயத்திலும் அதிசயமான விடயமாகும். உண்மையான இன நல்லுறவை பறைசாற்றும் இந்த சிறப்பு வாய்ந்த கற்சாசனத்தின் உள்ளடக்கம் பின்வருமாறு,
காலம் : விஜயபாகு அரசரது மறைவிற்கு பின்னர்
எழுத்து : திராவிட கிரந்த எழுத்துக்கள்
மொழி : சமஸ்கிருதம் கலந்த தமிழ்
அளவு : 8 அடி 2 அங்குலம் உயரம் மற்றும் 2 அடி 6 அங்குல அகலம் கொண்டது.
வரிகளின் எண்ணிக்கை : 49
மகா விஜயபாகு அரசரது சேனாதிபதியாகிய நகரகிரி தேவரால் உருவாக்கப்பட்ட தளதா மாளிகையையும் அதனை சூழவுள்ள ஏனைய விகாரைகளையும் வேளைக்கார படையினரால் கற்பம் முடியும் காலம் வரை பாதுகாத்துக்கொள்ளவே வேண்டும்.
புத்த பகவானுக்கு நமஸ்காரங்களாகட்டும் !!!
வளமிக்க இந்நாட்டின் இசுவாகு குலத்தின் வாரிசான சூரிய குலத்தோன்றலான மகா விஜயபாகு மாமன்னர் பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை தோற்கடித்து அனுராதபுரத்திற்கு சென்றார். அதன் பின்னர் சங்கையரின் வேண்டுகோலின்படி பௌத்த தர்மத்தை பாதுகாப்பதற்காக அரசராக முடிசூடினார். அரமானிலிருந்து (பர்மாவிலிருந்து) சங்கையரை வரவழைத்து மூன்று சங்க பிரிவுகளையும் தூய்மையாக்கினார். நாட்டை ஒருகுடைகீழ் கொண்டுவந்த விஜயபாகு அரசர் தார்மீகமான முறையில் அரசாட்சி செய்துகொண்டு மூன்று நிக்காயங்களுக்கும் துலா பாரம் கொடுத்து 55 வருட காலம் செங்கோலாட்சி செய்து தம் 73ம் வயது வரை வாழ்ந்தருளினார்.
அபயகிரியின் உத்தரமூலத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த புத்த பகவானது ஐயகொள்கலன் மற்றும் புனித தளதா உத்தமர் என்போரை விஜயராஜபுரத்திற்கு வரவைழத்து இங்கு தளதா முற்றத்தில் அமைந்திருக்கும் தளதா மாளிகையில் ஸ்தாபனம் செய்யப்பட்டது. இங்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் பெரிய புத்தசிலையின் கண்களில் மையிட்டு கண்ணாலம் செய்யும் உட்சவம் வருடந்தோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
உத்தரமூலத்தின் சீலமிகுந்த க்றறல் அறிவுடைய இராசகுருவான தொக்கல்லான தேரர் அரச அமாத்தியர்கள் புடைசூழ இவ்விடத்திற்கு வருகைதந்து எம்மை அழைத்து 'தளதா பள்ளியின் பாதுகாப்பு உங்கள் பொறுப்பிலானதாகும்' என மொழிந்தருளினார். அதன் பிற்கு நாம் எமது பெரியோர்களுடனும் தலைவர்களுடனும் கலந்தாலோசித்து இந்த புண்ணிய தலத்தின் நாமத்தை 'வேளைக்கார படையினரின் தளதாய பெரும்பள்ளி' என பெயர்சூட்டி இவ் பெரும்பள்ளி எம் பொறுப்பில் இருக்கின்ற பரிசுத்தமான புண்ணிய தலமாக நடாத்தப்பட வேண்டும் என முடிவு செய்தோம். மூன்று குழுக்களில் இருந்து ஒரு வீரர் என்ற வகையில் பாதுகாப்பு வழங்குவதற்கு; அவர்களது தேவைக்காக ஒருவருக்கு ஒரு வேளி நிலமும் வழங்க தீரமானமாயிற்று. விகாரத்திற்குரிய கிராமங்களையும் அதன் சேவகர்களையும் அதேபோன்று இவ்விடத்திற்கு அபயத்தை வேண்டி வருவோர்களையும் நாம் பாதுகாப்போம். எம் பரம்பரை தொடரும்வரை நாம் இப்போது முகங்கொடுத்திருக்கும் இடர்களுக்கு மேலான எத்தகைய பேரிடர்கள் வந்தாலும் நாம் எமது உயிரை தியாகஞ்செய்து இந்த முயற்சியில் ஈடுபடுவோம்.
சூரிய சந்திரர்கள் நிலைத்திருக்கும் வரை இதனை உறுதிபடுத்துவதற்காக எம்மால் இச்செய்து செப்பேட்டில் எழுதப்பட்டு(மொக்கல்லான தேரரிடம்) அளித்து அச்செய்தியை எம் கற்சாசனத்திலும் எழுதுவித்தோம். அதன்படி இந்த உடன்படிக்கையை மீறுபவர்கள் அதற்கு உதவி செய்பவர்கள் எமது எதிரியாவார்கள். அவன் காதந்திரத்திற்கு எதிரியாவான். ஐவகை பெரும்பாவங்களையும் செய்தவனாவான். புத்த பகவானுக்கு அளித்த ஒன்றை திருடிய பாவியாவான். அவர் மும்மணிகளிக்கு எதிராக பெரும் பாவம் செய்தவனாவான். அவன் மரணத்திற்கு பின்னர் நரகத்திற்கே போவான்.
உண்மையிலேயே இது அற்புதமானதொரு சாசனம் என உங்களுக்கு தோன்றலாம். மகா சங்கையரின் மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமான தமிழர்கள்,? அரச சின்னத்தைபாதுகாத்து தருமாறு வேண்டுகோல் விடும் அளவிற்கு நம்பிக்கைக்குரியவர்கள்? உண்மையிலேயே இது ஒன்றும் அற்புதமான விடயமல்ல. தொன்று தொட்டே நாமும் சிங்கவர்களும் சகோதரர்களாகவே வாழந்து வருகின்றோம். ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு பரஸ்பர புரிந்துணர்வுடனே வாழ்ந்து வருகின்றோம். இவ்விடயத்திற்கு சிறப்பானதொரு இன்னுமொரு உதாரணத்தை சொல்ல முடியும்.
915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது.ஜ1ஸ இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகப் பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்துகொண்டனர். உடனடியாகப் பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த இனக்கலவரத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யவும் கட்டளையிட்டது. அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூறே போன்ற இலங்கையின் முன்னணி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களைக் கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களைப் பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கிய காரணமான அனைவருக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட்டது. இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும். பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர்.
கண்களுக்கு சந்தோஷ கண்ணீர் சேர்க்கும் இத்தகைய சம்பவங்களால் எம் வரலாறு நிறைந்துள்ளது. எம் நாட்டில் சிற்சில காலங்களில் தோன்றிய எதிர்ப்புகள், முரண்பாடுகள் பிரச்சினைகள் என்பவற்றால் இந்த சுந்தரமான ஒற்றுமை பளுதடைந்து வந்துள்ளது. ஆனால் இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க செய்தியம்சங்களின் மூலம் மேலும் மேலும் எம் அதியமிக்க ஒற்றுமையும் புரிந்துணர்வுமே மேலெழுகின்றது. இலங்கையின் சிறப்பை இலங்கையரான நாம் காத்திடுவோம். வரலாற்றிலிருந்து கற்று எம் எதிர்காலத்திற்காக கைகோர்த்து நிற்போம்.
- மணிமேகலை

Comments
Post a Comment